முகம் தெரியாத மனிதர்கள்...
இது ஒரு நெடுந்தொடர்!!!
எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து இதுவரை நான் கடந்து வந்த பாதையில் பல தர பட்ட மனிதர்கள் , நம்மை நமக்கு அடையாளம் காட்டிய உள்ளங்கள் அதன் ஒரு தொகுப்பு தான் இது....
முகம் தெரியாத மனிதர்கள் ....
இதில் சொல்ல படும் அனைத்தும் ஒவ்வொருவரும் கட்டாயம் தங்கள் வாழ்கையில்
அனுபவித்து இருக்கலாம். கடந்தும் வந்து இருக்கலாம். சற்றே இளைப்பாற இருக்கும் சுமைகல் போலதான் இந்த தொடரும்.....
நடு சாமத்தில் ஊதல் ஊதி கொண்டு வரும் கூர்காவை யாரேனும் கண்டதுண்டா?
அதிகாலை பனியில் தலைக்கு குரங்கு குல்லாவை போட்டுகொண்டு நமக்கு பாக்கெட் பால் கொண்டு வந்து போடும் பால் காரரை யாரேனும் பார்த்தது உண்டா?
பொறுப்புடன் நம்மிடம் அவசர தகவல் களை திரட்டி கொண்டு வரும் தபால் காரரை சிநேகம் கொண்டதுண்டா??
அதிகாலை பொழுது முதல் இரவு வரை செய்தி வாசிக்கும் நபரை பற்றி நீங்கள் அறிந்த -துண்டா? பண்பலையில் பல தர பட்ட விசயங்களை நம்மோடு பகிர்ந்து கொள்ளும்
ஆடவர் பெண்டிர் பற்றி நீங்கள் அறிந்ததுண்டா??திரைப்படங்களில் முகம் தெரியாது
நம்மை மகிழ்விக்கும் நபர்களோடு நீங்கள் பழகியதுண்டா?
இவர்களை பற்றி ஒரு தொகுப்பு தான் இந்த தொடர்...
இது கற்பனை அல்ல.
முற்றிலும் நிஜம்....
அவர்களோடு உறவாடி , அவர்களின் அன்றாட அலுவல் பற்றி சொல்ல விழைகிறேன்..
உங்கள் நட்பு நாடி வரும் ஜெயராம் .....
இன்று முதல் நீங்களும் என்னோடு சேர்ந்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளலாம்..
இதை முன்னுரையாக எடுத்து கொள்ளுங்கள்...